தொழிலாளி பலி


தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 Aug 2021 1:22 PM GMT (Updated: 2021-08-27T18:52:39+05:30)

திருப்பூர் அருகே சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

நல்லூர்
திருப்பூர் அருகே சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தொழிலாளி
திருப்பூர் மாவட்டம்காங்கேயம் சிவன்மலைஅடிவாரம் பகுதியை சேர்ந்தவர்  தர்மராஜ். இவருடைய  மகன் நாகராஜ் வயது 28, இவர் வீடுகளுக்கு பெயிண்டிங் அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் பகுதியில் இரவு முழுவதும் நாகராஜ் வேலை செய்துள்ளார். பின்னர் நேற்று காலை 6.30 மணியளவில் காங்கேயம் ரோடு வழியாக சிவன்மலையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 
காங்கேயம் மெயின் ரோட்டில்  புதுப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் பலத்த காயம்  அடைந்த நாகராஜ் உயிருக்கு போராடினார்.
பலி
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நாகராஜை மீட்டு  திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story