1-ந்தேதி திறப்பு எதிரொலி பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


1-ந்தேதி திறப்பு எதிரொலி  பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Aug 2021 8:32 PM IST (Updated: 27 Aug 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் திண்டுக்கல்லில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.


திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகளை திறப்பது தாமதமாகி கொண்டே இருந்தது. எனினும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி பள்ளிகளை திறந்து கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தினமும் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமர வேண்டும். கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தூய்மைப்படுத்தும் பணி 
இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்பறைகளை ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வகுப்பறைகளை தயார்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அவையும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டன. அதேபோல் ஆய்வகம், சத்துணவு சாப்பிடும் அறை போன்றவையும் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


Next Story