திருச்செந்தூர் அருகே முதியவர் தற்கொலை


திருச்செந்தூர் அருகே முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Aug 2021 8:33 PM IST (Updated: 27 Aug 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

முதியவர் தற்கொலை

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ராணி மகாராஜபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 72). ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார். பின்னர் தனது மகனுக்கும் மகளுக்கும் அந்த ஆடு, மாடுகளை பிரித்து கொடுத்துள்ளார். ஆனால் ஆடு, மாடுகளை பிள்ளைகள் பராமரிக்காமல் விற்று விட்டனராம். இது குறித்து நடராஜன் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இரு மாடுகளை நடராஜனுக்கு கொடுக்க வேண்டும் என பேசி முடித்துள்ளனர். பாசமாக வளர்த்த ஆடு, மாடுகளை கவனிக்க முடியாததால் நடராஜன் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் வீட்டில் நடராஜன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து  திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story