மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை + "||" + sucide

பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை

பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). முதுகுளத்தூரில் வசித்து வந்த இவர் இளங்காக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவர் ராமநாதபுரத்தில் தேவேந்திர நகர் பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் இங்கு அந்தபகுதி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்று உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல் நிலை கவலைக்கிடமாகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. பெண் தீக்குளித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.