தூத்துக்குடியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 3:15 PM GMT (Updated: 2021-08-27T20:45:39+05:30)

மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடிக்கு பொது சொத்துக்களை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. இதனை கைவிட வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. பேச்சிமுத்து, ரசல், ஐ.என்.டி.யு.சி. ராஜகோபாலன், பால்ராஜ், பாலசிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யு. சிவராமன், சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story