குலசேகரன்பட்டினம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு


குலசேகரன்பட்டினம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 27 Aug 2021 8:49 PM IST (Updated: 27 Aug 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள தீதத்தாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 70). பல வருடங்களாக சென்னையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வயது முதிர்வு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, பம்புசெட்டை பராமரித்து வந்ததுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்ற அவர், அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் பிரபு அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்டதிற்கு தண்ணீர் பாய்க்க சென்ற அவர் கால் தடுமாறி மோட்டார் அறையையொட்டிய கிணற்றில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. 

Next Story