ஆபத்தான வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்


ஆபத்தான வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2021 4:42 PM GMT (Updated: 2021-08-27T22:12:42+05:30)

வேளுக்குடியில் ஆபத்தான வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
வேளுக்குடியில் ஆபத்தான வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆபத்தான வளைவு சாலை 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆபத்தான வளைவு சாலை உள்ளது. இந்த சாலை கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய முக்கிய நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் உள்ளது. 
இந்த சாலையில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர் மற்றும் கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும்  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையாகவும் உள்ளது. 
வேகத்தடை அமைக்க வேண்டும்
இந்த வளைவில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ெதரிவதில்லை. இதனால் வளைவில் திரும்பும் போது அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. சில நேரங்களில் உயிர்பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. விபத்துக்கள் நடைபெற்று வரும் வளைவு சாலையில் பல ஆண்டுகளாக  வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. வேளுக்குடியில் உள்ள வளைவு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி ஏற்படும் முன்பு வேளுக்குடி வளைவு சாலையில் இரண்டு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story