செஞ்சியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம்


செஞ்சியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம்
x
தினத்தந்தி 27 Aug 2021 10:18 PM IST (Updated: 27 Aug 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் ஆனது. இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முல்லை நகர் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி குமாரி (வயது 30). நிறைமாத கர்ப்பிணியான குமாரி, நேற்று செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அய்யனார், ஓட்டுநர் செல்வமணி ஆகியோர் விரைந்து வந்து சாலையோரம் படுத்திருந்த குமாரிக்கு அங்கேயே பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையையும், தாயையும் ஆம்புலன்சில் ஏற்றி செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். 

Next Story