குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வண்டிச்சோலை ஊராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட லோயர் டைகர்ஹில் சாலை, சீரமைப்பு பணி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரத்தில் நடந்து வரும் நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பு களின் சீரமைப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கோடமலை எஸ்டேட் பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அரசு பள்ளி
தொடர்ந்து எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அணியாடா இந்திராநகர் பகுதியில் கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.25.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், ரூ.32.71 லட்சத்தில் இளித்தொரை பகுதியில் நடந்து வரும் குடிநீர் திட்டப்பணிகள், கேத்தி பேரூராட்சி பைகமந்து பகுதியில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story