காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பென்னாகரம்,
காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பட்டதாரி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ராகரம் கங்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மகன் சக்திவேல் (வயது 23). பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரி. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சக்திவேலை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு சக்திவேல் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த சக்திவேல் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு பின்புறம் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story