சத்துணவு ஊழியர்களுக்கு பயிற்சி
சத்துணவு ஊழியர்களுக்கு பயிற்சி.
பந்தலூர்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி பந்தலூரில் நடந்தது. இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் பேசும்போது, வாக்காளர்கள் பட்டியலில் பெயர்களை சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பம் பெறப்பட்டது. தற்போது தங்கள் செல்போன்களில் கருடா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என்றார்.
இதில் தாசில்தார் குப்புராஜ், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான்எட்வீன் ராபட், இளநிலை உதவியாளர் அப்துல்சக்கீர் உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story