வந்தவாசியில் காரில் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது
வந்தவாசியில் காரில் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது.
வந்தவாசி,
வந்தவாசி போலீஸ் துணை போலீஸ் பே்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா உத்தரவின்பேரில் போலீஸ் -இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்,
காரில் 4 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் இருந்தன. இது தொடர்பாக சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தூதாராம், பதமராம் மற்றும் சங்கர்லால் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story