உடற்பயிற்சிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே உடற்பயிற்சிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உடற்பயிற்சிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப தகராறு
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 19). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் தனலட்சுமி உடல் எடையை குறைப்பதற்காக பயிற்சிக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக அவர் சரியாக பயிற்சிக்கு செல்லவில்லை. இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
தீக்குளிப்பு
இதனால் மனமுடைந்த தனலட்சுமி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story