தியாகதுருகம் அருகே அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


தியாகதுருகம் அருகே அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2021 10:41 PM IST (Updated: 27 Aug 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

கண்டாச்சிமங்கலம்

உடற் பயிற்சி கூடம்

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கரீம்ஷாதக்கா பகுதியில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்ச்சிக்கூடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், பூங்காவை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இதே பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் உள்ள கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு செய்த கலெக்டர் இந்த பகுதியில் தனி நபர் எத்தனை பேர் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்பது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலகத்துக்கும் இந்த இடத்திற்கும் எவ்வளவு தூரம் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள பழைய பெட்ரோல் பங்க் அமைந்திருந்த இடத்தையும் பார்வையிட்டார். 
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணன், தாசில்தார் பிரபாகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் யாசர்அராப், வருவாய் ஆய்வாளர்கள் ராமசாமி, பாஸ்கர், பாலு, கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

தீயணைப்பு நிலையம்

தியாகதுருகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக பிரிதிவிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கல்வட்டக்குழி வருவாய்த் துறையினரின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த இடத்திலேயே தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story