கலசபாக்கம் அருகே ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
கலசபாக்கம்
கலசபாக்கத்தை அடுத்த ஆணைவாடி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜாமணி (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற இரும்பு கேட் மற்றும் மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பீரோவும் உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த சுமார் 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து கலசபாக்கம் போலீசில் ராஜாமணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்புடைய திருடர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story