அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2021 10:57 PM IST (Updated: 27 Aug 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கபிஸ்தலம்:-

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். 

அகவிலைப்படி உயர்வு

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள புளியம்பாடி கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- 

பெண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அரசு நகர பஸ்சில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்து இருப்பது பாராட்டுக்குரியது. அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
இதேபோல் ஆசிரியர் பணியிடங்களிலும், அரசின் பல்வேறு துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளவர்கள், குறைவான ஊதியம் பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
இன்னமும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக அரசுடன் ஒத்துழைக்க அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும். 

நிதி ஒதுக்கீடு

பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும்போதும் கிராமங்களை நகர்ப்புறங்களாக விரிவாக்கம் செய்யும்போதும் அந்த பகுதிகளில் கிராமப்புற வேலை வாய்ப்பு இல்லாமல் போகும். 
எனவே நகர்ப்புற வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். தற்போது இதற்காக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story