கல்வராயன்மலையில் காரில் 480 லிட்டர் சாராயம் கடத்தல் 2 பேர் கைது
கல்வராயன்மலையில் காரில் 480 லிட்டர் சாராயம் கடத்தல் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் மோகன், பாலசுப்பிரமணியன், ராஜதுரை, சுரேஷ் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் நேற்று வெள்ளிமலை மற்றும் சேராப்பட்டு ஆகிய மலைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். சீவாத்து மூலை என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியவற்றை மறித்து சோதனை செய்தனர். இதில் காரில் தலா 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 லாரி டியூப்களில் 480 லிட்டர் சாராயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேராப்பட்டை சேர்ந்த முரளி மகன் சந்தோஷ்குமார் (வயது 23), சங்கராபுரம் தாலுகா புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜர் மகன் சசிகுமார்(29) என்பதும் கல்வராயன் மாலையில் இருந்து சாராயத்தை கடத்தி மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 480 லிட்டர் சாராயம், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story