பசுமை சாம்பியன் விருது


பசுமை சாம்பியன் விருது
x
தினத்தந்தி 27 Aug 2021 11:44 PM IST (Updated: 27 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பசுமை சாம்பியன் விருது

காரைக்குடி
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதை அங்கீகரித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான மாவட்ட பசுமை சாம்பியன் விருதினை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மகாத்மா காந்தி தேசிய கிராம கல்வி அமைப்பு அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தூய்மை, பசுமை பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் பசுமை விருது சான்றிதழை, கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தை பாராட்டி அளிக்கப்பட்ட இச்சான்றிதழ் அழகப்பா பல்கலைக்கழகம், செயல் திட்டக்குழுவை அமைத்து சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் பசுமை மேலாண்மை குறித்த திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்று குறிப்பிடுகிறது. அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுக்கான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்பணிகளுக்கான இணையவழி பயிற்சி பட்டறையினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சேகர், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பேராசிரியர் குருமூர்த்தி ஆகிேயார் ேபசினர்.

Next Story