கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு


கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 27 Aug 2021 11:44 PM IST (Updated: 27 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு

காரைக்குடி
காரைக்குடி கழனிவாசல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவர்  கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கியாஸ் நிறுவனத்தில் வசூலான ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தை தனது மேனேஜர் செல்லத்துரை மூலமாக தனது வீட்டிற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். அங்கு மதியழகன் மனைவி செல்லம்மாள் பணத்தை வாங்கி வீட்டு செல்ப்பில் வைத்துள்ளார். அதன்பின் அவர் வேறு வேலைகளில் கவனம் செலுத்த யாரோ வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே சென்று ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story