மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
இளையான்குடி
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் மற்றும் கொரோனா நிவாரண நிதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 3000 வழங்க வேண்டும், கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் மனோகரன், மலர்விழி, செயலாளர் முத்துராமலிங்க பூபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராஜு ஆகியோர் கண்டன முழக்கமிட்டு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், லிங்கம்மாள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story