5 நாளில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நாளில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் கார், வேன், லாரி ஓட்டுனர்கள், பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு சொந்த வாகனங்களை இயக்கும் தொழிலாளர்கள் என 302 பேர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமை தாசில்தார் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். இந்த சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் செய்து இருந்தனர். முகாமை ஆய்வு செய்ய வந்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:-சிவகாசி சுகாதார மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றியங்களும், சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நகராட்சிகளும் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு கடந்த 5 நாட்களில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் அனைத்து நகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவர்கள் உள்பட கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நாளில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story