ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2021 12:52 AM IST (Updated: 28 Aug 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி பேசினார். உதவித்தொகை வழங்கக்கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் கடந்த ஓராண்டு காலமாக எந்தவித பதிலும் இல்லாமல் உள்ளது. எனவே உரிய விசாரணை செய்து அவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பாக்கியராஜ், ஜனநாயக மாதர் சங்க நகர தலைவர் மைதிலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story