அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆலங்குளம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூைஜ நடந்தது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் காளியம்மன் கோவில், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கொங்கன்குளம் காளியம்மன் கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் காளியம்மன் கோவில்களில் உள்ள அம்மனுக்கு வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் சமூக இடைவெளி விட்டு, முக கவசம் அணிந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல தாயில்பட்டியில் உள்ள கோட்டையூர் சக்தி மாரியம்மன், பச்சையாபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன், தெற்கு தெருவில் உள்ள கழுவுடையம்மன், துரைசாமிபுரத்தில் உள்ள ராஜகாளி அம்மன், கீழசெல்லையாபுரத்தில் சுந்தாளம்மன், ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன், ராமலிங்கபுரத்தில் சவுடம்மன், மீனாட்சிபுரத்தில் காளியம்மன் ஆகிய கோவில்களில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story