மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2021 12:58 AM IST (Updated: 28 Aug 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு நின்று  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடுமையான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அனைத்து நாட்களும் வேலை வழங்க வேண்டும். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பிலும் 5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் குமாரசுவாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கரசுப்பு, இணை செயலாளர் சுமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஆட்டோ தொழிற்சங்கம் முருகன், தாலுகா செயலாளர் வரகுணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதே போல் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story