வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயம்


வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயம்
x
தினத்தந்தி 28 Aug 2021 12:59 AM IST (Updated: 28 Aug 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகைகள் மாயமானது.

சிவகாசி, 
சிவகாசி, கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் (வயது 58). இவரது 2-வது மகள் ஜென்சி கிறிஷ்டினாவுக்கும், மதுரையை சேர்ந்த ரவீன்சித்தார்த் என்பவருக்கும் கடந்த 20-ந் தேதி திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டையும் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் ஜென்சி கிறிஷ்டினா தான் அணிந்து இருந்த நகைகளை கழற்றி கபோர்டில் வைத்த போது அதில் ஏற்கனவே இருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆசிர்வாதம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story