பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு


பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 27 Aug 2021 7:33 PM GMT (Updated: 2021-08-28T01:03:41+05:30)

சிவகாசி அருகே பெயிண்டரை அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள குமிழங்குளத்தை சேர்ந்தவர் மார்த்தாண்டன் (வயது 38). பெயிண்டர். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் மார்த்தாண்டன் நேற்று முன்தினம் இரவு அழகாபுரி- எரிச்சநத்தம் ரோட்டில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த பிரபாகரன் என்னை ஏன் கேலி செய்கிறாய் என்று கூறி அரிவாளால் மார்த்தாண்டன் தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து மார்த்தாண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story