களக்காட்டில் உறைகிணறு அமைக்க வேண்டும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
களக்காட்டில் உறைகிணறு அமைக்க வேண்டும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இட்டமொழி:
சென்னையில் பேரூராட்சிகளின் தலைமையக ஆணையரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நீர்வளம் நிறைந்த களக்காடு மலையடிவார பகுதியில் கோடை காலத்திலும் இயற்கையான ஊற்று தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் உறை கிணறு அமைத்தால், களக்காடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க முடியும்.
பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சினைக்கு உதவும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உறைகிணறு ரூ.1.2 கோடியில் அமைக்க மதிப்பீடு செய்து, தங்களது ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறோம்.
பொதுமக்களின் நலன்கருதி, இந்த குடிநீர் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து, விரைவில் நிறைவேற்றி தர கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story