தனியார் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி; தலைமை நிர்வாகி மீது வழக்கு


தனியார் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி; தலைமை நிர்வாகி மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Aug 2021 1:45 AM IST (Updated: 28 Aug 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

அம்பை தனியார் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக தலைமை நி்ர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நெல்லை:
அம்பையைச் சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகள் பிரியங்கா. இவர் அம்பையில் தனியார் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடையம் அருகே முதலியார்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து தலைமை நிர்வாகியாக வேலை செய்து வந்தார். சமீபத்தில் பிரியங்கா தனது நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, அதிகளவில் பணம் இருப்பு குறைவது தெரிய வந்தது. இதுகுறித்து பிரியங்கா, நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை சுடலைமுத்து தனது வங்கி கணக்கில் செலுத்தியதும், மேலும் அவர் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றதும், மொத்தம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியங்கா, சுடலைமுத்துவிடம் கேட்டபோது, அவர் கொலைமிரட்டல் விடுத்து சென்று விட்டாராம். இதுகுறித்து பிரியங்கா நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், சுடலைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story