கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை


கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை
x
தினத்தந்தி 28 Aug 2021 1:46 AM IST (Updated: 28 Aug 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர்
பச்சிளம் குழந்தை
கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வது மாடியில் உள்ள பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அய்யர்மலையை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உதவியாக அவரது தாய் இருந்து உள்ளார்.
இந்தநிலையில், அந்த பெண் கழிவறைக்கு சென்று வந்த பின்பு தான் அந்த கழிவறையில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story