மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; லாரி டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 28 Aug 2021 1:59 AM IST (Updated: 28 Aug 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நொய்யல்,
புன்னம்சத்திரம் அருகே பெருமாள் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புன்னம்சத்திரம் நோக்கி பெருமாள் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பெருமாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, வேலாயுதம்பாளையம்  சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்தவடிவேல், டிராக்டரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மூனூட்டுப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (35) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story