புகையிலை பொருட்கள் பறிமுதல்; கடை உரிமையாளர் கைது
புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசாா், கடை உரிமையாளரை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கடைவீதி, பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது ஜெயங்கொண்டம் கடைவீதியில் சிதம்பரம் சாலையில் குமரன் என்பவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் குமரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக ஜெயங்கொண்டம் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story