புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
தென்காசியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தென்காசி- ஆய்க்குடி சாலையில் வந்த ஒரு ஆட்டோவை சோதனை நடத்தியபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று தென்காசி உடையார் தெரு பகுதியில் சோதனை நடத்தியபோது 2 இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடமும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும். இதனை வைத்திருந்ததாக ரெட்டைகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் (வயது 36), தென்காசி பாறையடி தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது (36), தைக்கா தெருவைச் சேர்ந்த சலீம் (48), மேல வாலியின் பொத்தையைச் சேர்ந்த பிரசன்னா (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் ரூ.25 ஆயிரம், ஒரு ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story