கற்பழிப்பு குற்றவாளிகளின் உறுப்புகளை துண்டிக்க வேண்டும்; மந்திரி ஆனந்த்சிங் ஆவேசம்
கற்பழிப்பு குற்றவாளிகளின் உறுப்புகளை துண்டிக்க வேண்டும் என்று மந்திரி ஆனந்த்சிங் ஆவேசமாக கூறினார்.
பெங்களூரு: மைசூரு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மைசூருவில் நடந்த இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. குற்றம் புரிந்தவர்களின் உடல் உறுப்புகளை துண்டிக்க வேண்டும்" என்று கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறுகையில், "மைசூருவில் நடந்த பலாத்கார சம்பவத்தில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். சட்டப்படி அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. கூறுகையில், "மாணவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் கற்பழித்தது மட்டுமின்றி அந்த பெண்ணை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பல நாட்கள் ஆகியும் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது" என்றார்.
Related Tags :
Next Story