விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடுங்கள்; பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வீட்டிலேயே பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவமொக்கா: முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தனது சொந்த ஊரான சிவமொக்கா மாவட்டத்திற்கு நேற்று வந்தார். அவர், பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு ரூ.1½ கோடியில் புதிதாக வாங்கிய காரில் வந்து இறங்கினார். சிவமொக்கா டவுன் வினோபா நகரில் உள்ள வீட்டிற்கு எடியூரப்பா வந்தார். பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மாபெரும் வெற்றி பெறும். குறைந்த பட்சம் 140 தொகுதிகளில் பா.ஜனதாவை வெற்றிபெறச் செய்வோம். விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். என்னுடன் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மாவட்ட பொறுப்பு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பயணம் மேற்கொள்வார்கள்.
காங்கிரசார் என்னை கற்பழிக்கிறார்கள் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேசிவிட்டார். அதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். அண்டை மாநிலங்களான கேரளா, மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாம் மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுஇடங்களில் விமரிசையாக இல்லாமல் தங்களது வீட்டிலேயே கொண்டாடினால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story