கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டு கொல்ல வேண்டும்; குமாரசாமி ஆவேசம்
மைசூருவில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் செய்தவர்களை என்கவுன்ட்டரில் சுட்டு கொல்ல வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
பெங்களூரு: மைசூருவில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் செய்தவர்களை என்கவுன்ட்டரில் சுட்டு கொல்ல வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
ஐதராபாத் வழக்கு
மைசூருவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, ஐதராபாத்தில் என்ன நடந்ததோ அதை இங்கு செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சன்னடபட்டணாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐதராபாத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில் தவறு செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை (என்கவுன்ட்டரில் துப்பாக்கியால் சுட்டு கொலை) நான் பாராட்டுகிறேன். என்ன செய்ய வேண்டுமோ அதை போலீசார் இறுதியாக செய்தனர். கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை நிலைமை மாறாது.
ஜாமீனில் வருகிறார்கள்
பொது இடங்களில் மது குடிப்பதை இந்த அரசு தடுக்கவில்லை. கிராமங்களில் சூதாட்டங்கள் அதிகளவில் நடக்கின்றன. போலீசார் அப்பாவிகள் மீது வழக்குகளை போடுகிறார்கள். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. பணம் வாங்கி கொண்டு பணி இடமாற்றம் செய்யப்படுவதால் தகுதியற்ற போலீசார் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
தற்போது உள்ள நடைமுறையில் தவறு செய்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சில நாட்களுக்கு பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வருகிறார்கள். அதனால் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கை குற்றம் செய்பவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story