அரசு ஊழியரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி


அரசு ஊழியரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 28 Aug 2021 2:18 AM IST (Updated: 28 Aug 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிக்கமகளூரு: அரசு ஊழியரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

சிறுநீர் குடிக்க வைத்தார்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் அர்ஜூன். இவர் கடந்த மே மாதம் 10-ந்தேதி, ஒரு வழக்கில் உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கிருகுந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர் புனித் என்பவரை வற்புறுத்தி உள்ளார். ஆனால், அந்த வழக்கை புனித் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன், புனித்தை தாக்கியதுடன் போலீஸ் நிலையத்தில் இருந்த குற்றவாளி ஒருவரிடம் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து சித்ரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முன்ஜாமீன் மனு

இந்த வழக்கின் விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.டி. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், புனித்தை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. 
இதனால், தான் கைதாகாமல் இருப்பதற்காக, கர்நாடக ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 

ஐகோர்ட்டில் தள்ளுபடி

சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் கர்நாடக ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அர்ஜூனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என கூறி, அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

Next Story