பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 2:22 AM IST (Updated: 28 Aug 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது

அறந்தாங்கி
அறந்தாங்கியில் உள்ள சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மாலதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story