அயோத்தியாப்பட்டணம் அருகே லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
அயோத்தியாப்பட்டணம் அருகே லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம், காரிப்பட்டி, மின்னாம்பள்ளி, வரகம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து ஜல்லி, கல், மணல், எம்.சேண்ட் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு டிப்பர் லாரிகளில் அனுப்பப்படுகிறது.
கல் குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து உடைப்பதால் பெரிய அளவில் சத்தமும், அதிர்வு ஏற்படுவதாகவும், குவாரியில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மின்னாம்பள்ளி பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் இருந்து குடியிருப்பு பகுதி வழியாக ஜல்லி மற்றும் கல், மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் வீடுகளில் தூசி படிவதாகவும், காற்று மாசுபடுவதாகவும் கூறி டிப்பர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story