கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் மற்றும் 5 தி.மு.க. உறுப்பினர்கள், 5 அ.தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், ஒன்றிய ஆணையாளர் அருள் பாரதி தீர்மானங்களை வாசித்தார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து பேசும் போது, அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் பிரியா ஒன்றிய நிதியில் முறைகேடு செய்துள்ளார். எனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். அவர் அரசு வழங்கும் நிதியை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. மற்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். பல மாதங்களாக பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. எங்களிடம் வரவு செலவு விவரம் சரியாக சமர்ப்பிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
பின்னர் திடீரென்று தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயேந்திரன், உறுப்பினர்கள் கோமதி, கலைச்செல்வி, முருகேசன், கார்த்திக், சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 2½ மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்றியக்குழு தலைவரை மாற்ற வேண்டி ஒன்றிய ஆணையாளர் அருள் பாரதியிடம் மனு அளித்தனர். அதற்கு அவர் நீங்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் 6 பேரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story