சேலம் உருக்காலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம்
சேலம் உருக்காலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சூரமங்கலம்:
சேலம் உருக்காலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. உருக்காலை 5-வது கேட் நுழைவு வாயில் அருகே கடந்த 26-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். உயர்த்தப்பட்ட பண அட்டவணையுடன் ஊக்க ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகி வக்கீல் அலெக்சாண்டர், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story