மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; கணவர் கைது


மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; கணவர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 4:40 AM IST (Updated: 28 Aug 2021 4:40 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக சிறுமியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்:
தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்த தகவலின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் கணவரான பொக்லைன் ஆபரேட்டரை கைது செய்தனர்.

Next Story