வேன் மோதி பகவதி அம்மன் கோவில் இடிந்தது
சேவூர் அருகே வலையபாளைத்தில் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பகவதி அம்மன் கோவில் நேற்று அதிகாலை முற்றிலும் இடிந்து சேதமானது. இந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.
சேவூர்
சேவூர் அருகே வலையபாளைத்தில் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பகவதி அம்மன் கோவில் நேற்று அதிகாலை முற்றிலும் இடிந்து சேதமானது. இந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.
பகவதி அம்மன் கோவில்
சேவூர் கோபி சாலையில் வலையபாளையத்தில் 150 ஆண்டுகள் பழமையான சுயம்பு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வலையபாளையம் போலநாயக்கன்பாளையம், சிந்தாமணிப்பாளையம் நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பகவதி அம்மனை இஷ்ட தெய்வாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆடி பங்குனி மாதங்களில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டு திருவிழா நடத்துவது வழக்கம்.
மேலும் சேவூர் கோபி பிரதான சாலையில் கோவில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள், பனியன் நிறுவன பஸ்கள் ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் நாள்தோறும் அம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு செல்கிறார்கள். இதேபோல சேவூர், போத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாடகை ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வாகனங்களில் வந்து சிறப்பு வழிபாடும் செய்து வந்தனர்.
வேன் மோதியது
இந்த நிலையில் சுற்றுலாவிற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் அவினாசி, சேவூர் வழியாக கோபி சாலையில் போத்தம்பாளையம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக வலையபாளைத்தில் சாலையோரம் இருந்த பகவதி அம்மன் கோவில் மீது மோதியது. இதில் பகவதி அம்மன் கோவில் முற்றிலும் இடிந்து சேதமானது. சுற்றுலா வேனில் வந்த டிரைவர் அன்பரசன் வயது 27 காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story