தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையே வேலைக்கு செல்கிறவர்களும் தடுப்பூசி சிரமம் இன்றி போட்டுக்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரம் தடுப்பூசி போடும் திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைக்கு சென்று விட்டு வருகிறவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும்.
2,480 பேருக்கு தடுப்பூசி
இந்நிலையில் நேற்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 ஆயிரத்து 480 பேருக்கு தடுப்பூசி போடுவதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதலே வரிசையில் காத்து நின்றனர். இதனால் தடுப்பூசி போட பலரும் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்து நின்றனர். தொடர்ந்து வரிசைப்படி, தடுப்பூசி செலுத்தப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த பலரும் கால் வலியால் அந்த பகுதியில் இருந்த கற்கள் மீதும் அமர்ந்தபடி இருந்தனர். அதன்பின்னர் தடுப்பூசி போட்டனர்.
Related Tags :
Next Story