வீடு இடிந்து விழுந்து விபத்து; இடிபாடுகளுக்குள் சிக்கிய இளம்பெண் பத்திரமாக மீட்பு
வீட்டின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த இளம்பெண்ணும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்.
புனே,
புனே மாவட்டம் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் புகேவாடி அருகே உள்ள பழைய வீட்டில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அந்த வீட்டின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த இளம்பெண்ணும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றி இளம்பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் அந்த வீடு அமைந்துள்ள பகுதி மிகவும் நெரிசலானது என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் பழைய வீடு என்பதால் மீட்பு பணியின் போது மேலும் சில பகுதிகள் இடிந்து விழுந்தது. எனினும் துரிதமாக செயல்பட்ட மீட்பு படையினர் இளம்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story