10 கிலோ ஆடு ரூ.4,500க்கு விற்பனை
10 கிலோ ஆடு ரூ.4,500க்கு விற்பனை
குண்டடம்
குண்டடம் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.4500க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாரச்சந்தை
குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் வரத்து விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆடுகள், கோழி வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வாங்கி விற்கும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி செல்வம் கூறியதாவது
குண்டடம் வாரச்சந்தைக்கு சனிக்கிழமை தோறும் கூடும். அப்போது ஆடு, கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்
இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, திருப்பூர்,கோவை, பொள்ளாச்சி,உடுமலை,பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறுபகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.
விலை
வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். விற்பனைக்கு வரும் அனைத்து ஆடுகளும் காலை 8 மணிக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால் இன்று ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை குறைவாக இருக்கும். இதனால் வியாபாரிகள் ஆடுகளை வாங்க அக்கறை காட்டவில்லை. இதனால் ஆடு,கோழிகள் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது
கடந்த வாரம் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள 1 ஆடு ரூ.6ஆயிரத்து 500க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.4 ஆயிரத்து 500க்கு விலைபோயுள்ளது. கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த 2 குட்டிகளுடன் கூடிய பெரிய ஆடு இந்த வாரம் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது
கோழிகள்
சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகாலை 3 மணிமுதல் காலை 8 மணிவரை ஆயிரக்கணக்கான கோழிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர். வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்த கோழிகளை வாங்க தாராபுரம், காங்கேயம், பல்லடம் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தவிர தரமான சண்டை சேவல்கள் சீசனில் நல்ல விலைக்கு விற்பனையாவதுடன் அவற்றுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இந்த வாரம் கோழிகள் மற்றும் சண்டையிடும் சேவல்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் இறைச்சிக்கு விற்கும் கோழிகள் சேவல்கள் கடந்த வராம் 1 கிலோ ரூ.450முதல் ரூ.500 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலைபோனது. ஆடு, கோழிகள் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலைடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story