கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 28 Aug 2021 6:53 PM IST (Updated: 28 Aug 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பரணிதரன், ஊராட்சி செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் சிற்றம்பாக்கம், சிற்றம்பாக்கம் காலனி, தென் காரணி போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story