ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதல் மில் ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம்


ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதல் மில் ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Aug 2021 3:30 PM GMT (Updated: 2021-08-28T21:00:31+05:30)

ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதலில் மில் ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகே உள்ள ஆரியநல்லூரை சேர்ந்தவர் ஜோசப் தர்மராஜ் (வயது 45). தனியார் மில் ஊழியர். இவர் மில்லுக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர்-கரூர் சாலையில் கருக்காம்பட்டி வழியாக  சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது அதே ஊரை சேர்ந்த மருதுபாண்டி (28) என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் நடுப்பகுதிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது. 
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மருதுபாண்டி, ஜோசப் தர்மராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மருதுபாண்டி, ஜோசப் தர்மராஜ் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story