திருவண்ணாமலையில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை நூதன முறையில் பறிப்பு


திருவண்ணாமலையில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை நூதன முறையில் பறிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 9:38 PM IST (Updated: 28 Aug 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் அரசு உயர் அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் 8 பவுன் நகையை நூதன முறையில் பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அரசு உயர் அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் 8 பவுன் நகையை நூதன முறையில் பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு உயர் அதிகாரிகள்

திருவண்ணாமை செங்கம் சாலை 5-வது தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 60). இவர், கடந்த 26-ந்தேதி காலையில் நடைபயிற்சி சென்றுள்ளார். 

அப்போது செங்கம் சாலை ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து செல்லும் போது திடீரென 2 பேர் நாங்கள் அரசு உயர் அதிகாரிகள் என்று தெரிவித்து, நகை வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இதுபோன்று நகைகளை அணிந்து கொண்டு வெளியில் வரலாமா என்று அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பர்சை கொடுத்து உள்ளனர். அந்த பர்சில் மூதாட்டி தான் அணிந்து இருந்த 8 பவுன் நகையை வைத்துள்ளார்.

2 பேருக்கு வலைவீச்சு

பின்னர் அவர் பர்சை கையில் வைத்து கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். தொடர்ந்து அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆதிலட்சுமியின் கையில் இருந்து பர்சை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் மூதாட்டி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story