கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
திருமக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ைளயடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ைளயடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆவணி அப்பன் கோவில்
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆவணி அப்பன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கோவில் பூசாரி சங்கர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலின் இரும்பு கேட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் கோவிலில் இருந்த 3 உண்டியல்களில் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.
விசாரணை
இது குறித்து திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story