தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2021 10:36 PM IST (Updated: 28 Aug 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி அருகே உள்ள கே.பி தளவாய்புரத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). கூலித்தொழிலாளி இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இவர்களில் முதல் மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். 2-வது மகளும், அவரது தாயும் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சண்முகம் தற்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி தளவாய்புரத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த அவர் அங்கிருந்து வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு பகுதிக்கு சென்றார். அங்குள்ள மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு சென்றார். அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story